பெய்ஜிங்: சீனா பிரச்சினைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நான்கு ஏவுகணைகளைப் பாய்ச்சியதால் சீனா-அமெரிக்க உறவில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
முன்னதாக சீனாவுக்கு உதவிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதையடுத்து பதிலடித் தரும் வகையில் தென் சீனக் கடலில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியில் சீனா நான்கு நடுத்தர தொலைவு ஏவுகணைகளை பாய்ச்சி தனது வலிமையைக் காட்டியது.
இதற்கிடையே சீனாவில் கிருமித் தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதால் கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்ட பெரும்பாலான உள்நாட்டு விமானச் சேவைகள் இம் மாதத்திற்குள் முழுமையாக மீண்டு விடும் என்று ஃபார்வர்ட்கீஸ் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

