நேரடி ஒப்பந்தங்களால் தவறு இல்லை: மலேசியா

நேரடி ஒப்பந்தங்களால் தவறு இல்லை: மலேசியா

1 mins read
eaddce64-f382-48e6-add2-819d52727b3a
-

கோலாலம்பூர்: ஒப்பந்தக் குத்தகைக்கு கோரிக்கை விடுக்காமல் நேரடி பேச்சுவார்த்தை மூலம் குத்தகைகளை வழங்குவதால் தவறு அல்ல என்று மலேசிய நிதி அமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ் தெரிவித்துள்ளார். முன்னைய பக்கத்தான் அரசாங்கம் பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள குத்தகைகளை முறையாக கோரிக்கை விடுக்காமல் வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதனை அரசியலாக்கக் கூடாது என்று கூறிய அமைச்சர் ஸஃப்ரூல், நேரடியாக குத்தகை களை வழங்க சட்டத்தில் இட முண்டு என்று குறிப்பிட்டார்.

முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங், முன்னைய பக்கத்தான் ஹரப்பான் அர சாங்கம் சுமார் 6.61 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒப்பந்தங் களை நேரடியாக வழங்கியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து ஆளும் அர சாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி தந்ததால் 101 ஒப் பந்தங்களின் விவரங்களை அரசு வெளியிட்டது.