வாஷிங்டன்: விஸ்கோன்சில் உள்ள கெனோஷா நகரில் போலிசாருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்பில் இளையர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கறுப்பின ஆடவரின் பின்பக்கத்தில் போலிசார் பலமுறை சுட்டதால் அந்நகரில் கலவரம் மூண்டது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சாதாரண உடைடயில் இருந்த ஒரு இளையர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்தார்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் இளையரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே கெனோஷா நகரில் பேசிய 'ஷெரிஃப்' டேவிட் பெத், "மக்கள் நீதி கேட்டு போராடுவது புரிகிறது. அதே சமயத்தில் ஊரடங்கு உத்தரவை அவர்கள் மதித்து நடக்க வேண் டும்," என்று வலியுறுத்தி னார்.

