ஜப்பானிய பிரதமர் அபே பதவி விலகல்

ஜப்பானிய பிரதமர் அபே பதவி விலகல்

2 mins read
a3ee4e14-5bd0-48c7-8dcf-6bb3a74ecf93
உடல்நலக் குறைவு காரணமாக எட்டு ஆண்டு காலம் வகித்த பிரதமர் பதவியிலிருந்து விலகினார் ஷின்ஸோ அபே. படம்: ஏஎஃப்பி -

தோக்­கியோ: உடல்­ந­லக் குறைவு கார­ண­மாகப் பதவி வில­கு­வ­தாக ஜப்­பா­ன் பிர­த­மர் ஷின்ஸோ அபே நேற்று அறி­வித்­தார்.

உள்­ளூர் நேரப்­படி நேற்று மாலை 5 மணிக்கு நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய, 65 வய­தான அபே பெருங்­கு­டல் அழற்சி நோய் கார­ண­மாக மக்­க­ளின் நம்­பிக்கை மற்­றும் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ஏற்ப தன்­னால் வாழ முடி­யுமா என்று தெரி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கச் சொன்­னார்.

தான் தற்­போது எடுத்­துக்­கொள்­ளும் மருந்­து­கள் பல­னளிக்­கா­த­தால், தனக்குக் கூடு­தல் சிகிச்சை தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அவர் சொன்­னார். கடந்த திங்­கட்­கி­ழமை மேற்­கொண்ட மருத்­துவ பரி­சோ­த­னை­யின்­போது, பதவி வில­கு­வது குறித்து அவர் முடிவு செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வரும் குளிர்­கா­லத்­தில் கொரோனா பர­வல் மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்ள நிலை­யில், அப்­போது அர­சி­ய­லில் வெற்­றி­டம் இருப்­பதைத் தான் விரும்­ப­வில்லை என்­றும் அபே கூறி­னார்.

கடந்த ஏழு ஆண்­டு­கள் மற்­றும் எட்டு மாதங்­களில் மக்­கள் தமக்கு அளித்த ஆத­ர­வுக்கு நன்றி தெரி­வித்த அபே, நாடு இன்­னும் கொரோனா தொற்றை எதிர்த்­துப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போ­தும், வட­கொ­ரிய கடத்­தல்­கா­ரர்­கள் மற்­றும் ரஷ்­யா­வு­ட­னான தக­ராறு போன்ற பிற பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்­கும் நிலை­யி­லும் ஒரு வரு­டம் முன்­ன­தா­கவே பதவி வில­கி­ய­தற்­கா­க­வும் அவர் மன்­னிப்பு கேட்­டார்.

அடுத்த பிர­த­ம­ரைத் தேர்ந்­

தெ­டுக்­கும் வரை தான் பிர­த­ம­ராக நீடிப்­பேன் என்­றும் அவர் சொன்­னார்.

புதிய பிர­த­ம­ருக்­கான தேர்வு அடுத்த மாதம் நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தற்காப்பு அமைச்சர் டாரோ கோனோ, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆகியோரில் ஒருவர் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் அவர் இரு முறை மருத்துவமனைக்கு சென்றுவந்ததை

யடுத்து, அவரது உடல் நலம் பற்றிய ஐயம் எழத் தொடங்கியது.

கடந்த 2007ஆம் ஆண்டிலும் நீண்டநாள் செரிமானப் பிரச்சினைக் காரணமாகவே அவர் பதவி விலகினார். நாட்டின் பொருளியலை மீட்க உறுதிபூண்டு 2012ஆம் ஆண்டில், மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் அபே.

50 ஆண்டுகளுக்கு முன்பு திரு அபேயின் உறவினர் ஐசாகு சாத்தோ பிரதமர் பதவி வகித்த நாட்களின் எண்ணிக்கையை, அபே கடந்த திங்கட்கிழமை முறியடித்தார்.

கிட்­டத்­தட்ட 8 ஆண்­டு­க­ளாக பிர­த­ம­ராக உள்ள திரு அபே, கொரோனா கிரு­மித்­தொற்று பர­வ­லைக் கையாண்ட விதம், அவ­ரது கட்சி உறுப்­பி­னர்­கள் மீதான ஊழல் குற்­றச்­சாட்டு ஆகி­யவை அண்­மை­யில் விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­ன­தை­ய­டுத்து, மக்­க­ளின் ஆத­ரவு சற்று சரிந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அபே­வின் பதவி வில­கல் குறித்து முன்­ன­தா­கவே ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­னதை

யடுத்து, ஜப்­பா­னியப் பங்­குச் சந்தை சரிவை நோக்­கித் திரும்­பி­யது. நிக்­கேய் குறி­யீடு, நாளின் தொடக்­கத்­தில் இருந்­த­தை­விட 2.1 விழுக்காடு குறைந்­தது.