சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் இவ்வார இறுதிக்குப் பிறகு, புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் 100க்கும் கீழ் குறையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விக்டோரியாவில் 113 புதிய தொற்று சம்பவங்கள் பதிவானதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் பதிவான 725 என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் இது பெருமளவு குறைவாகும்.
விக்டோரியாவில் கிருமித்தொற்றின் இரண்டாவது அலை தலைதூக்கியதையடுத்து, அங்கு ஆறு வாரங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மற்ற மாநிலங்கள் விக்டோரியாவுடனான எல்லை பகிர்வைத் துண்டித்ததால், கிருமிப் பரவல் நாடு முழுவதும் மோசமடையக் கூடிய நிலைமை தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உடற்பயிற்சி கூடங்களோடு தொடர்புடைய புதிய கிருமித்தொற்று குழுமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் நேற்று பொது சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் உடற்பயிற்சிக் கூடத்தோடு தொடர்புடைய 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளது என்றும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

