'இந்தோனீசியாவில் அடுத்தாண்டில் தடுப்பூசி'

'இந்தோனீசியாவில் அடுத்தாண்டில் தடுப்பூசி'

1 mins read
ed1154e7-7516-4bdf-9641-6b2c89fb8587
தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் ஆரம்பகட்டத்தில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடும். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் அடுத்­தாண்டு இறு­திக்­குள் அனை­வ­ருக்­கும் தடுப்பு மருந்து கிடைக்க செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் மிகப்­பெ­ரிய மருந்து நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

அமெ­ரிக்கா போன்ற பணக்­கார நாடு­கள் பில்­லி­யன் கணக்­கான தடுப்­பூ­சி­களை வாங்குவதற்­கான ஒப்­பந்­தத்தை எட்­டி­யுள்­ள நிலையில், ஏழை நாடுகள் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்­நி­லை­யில், பி.வி.கல்பே ஃபார்மா என்ற அந்நிறு­வ­னத்­தின் தென்­கொ­ரிய பங்­கா­ளி­யான ஜெனெக்­சின் நிறு­வ­னம் முதல் கட்ட பரி­சோ­த­னை­களை அக்­டோ­பர் மாதம் முடிக்க உள்­ள­தா­க­வும் இரண்­டாம் கட்ட பரி­சோ­த­னை­கள் வரும் நவம்­பர் மாதம் தொடங்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­

வ­தா­க­வும் கல்பே நிறுவனத் தலை­வர் தெரி­வித்­தார்.

இரண்டாவது கட்ட பரி­சோ­தனை மே 2021ல் முடி­வ­டை­யும் என்­றும் அதில் இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து மட்­டும் சுமார் 600 பேர் ஈடு­ப­டுத்­தப்படு­வார்­கள் என்­றும் அவர் சொன்­னார்.

தென்­கொ­ரிய நிறு­வ­னத்­தி­டம் இருந்து மருந்­து­களை வாங்கத் திட்­ட­மிட்­டுள்ள கல்பே, ஆண்­டிற்கு 30 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் தயா­ரிக்­கக்­கூ­டிய தொழிற்­சாலை ஒன்றை நிறு­வ­வும் திட்­ட­மிட்­டுள்­ளது. இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று முன்­தி­னம் ஆக அதி­க­மாக 2,719 தொற்று சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­டன.