கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 25 மில்லியனைக் கடந்தது

1 mins read
d2a69cf9-ebe9-4e53-abbf-5cd4d48f3806
40 விழுக்காடு கொவிட்-19 சம்பவங்கள் அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரு நாடுகளில் பதிவானவை. படம்: இபிஏ -

அனைத்துலக அளவில் 25 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்சம் 25,029,250 பேர் இந்த மூச்சுத் திணறல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுவரை 842,915 பேர் உயிரிழந்தனர்.

இதில் 40 விழுக்காடு கொவிட்-19 சம்பவங்கள் அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரு நாடுகளில் பதிவானவை. இவ்விரு நாடுகளும் கொவிட்-19ஆல் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டவை.

ஒவ்வொரு நான்கு நாட்களிலும் கூடுதலாக 1 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதாக ஏஎஃப்பியின் கிருமித்தொற்று எண்ணிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கிடையே, இந்தியாவிலும் கிருமித்தொற்று எண்ணிக்கை பெருகி வருகிறது. 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத உச்சமாக 78,761 பேருக்கு இன்று கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருளியல் வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல், நாடுகள் கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும் அதிகரித்து வரும் கிருமிப் பரவலுக்குக் காரணமாக அமைகிறது.

குறிப்புச் சொற்கள்