பெட்டாலிங் ஜெயா: வெளிநாட்டில் இருந்து திரும்பிய 15 பேர் உட்பட மலேசியாவில் நேற்று 17 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகின.
இந்தியா, ஜப்பான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய 15 பேரில் 11 பேர் மலேசியர்கள்.
இரண்டு உள்ளூர் சம்பவங்கள் சிலாங்கூர் மற்றும் கெடா ஆகிய மாநிலத்தில் ஏற்கெனவே தொற்றுக்கு ஆளானவர்களோடு தொடர்புடையவை ஆகும்.
இதற்கிடையே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ள 75 வயது மலேசிய ஆடவர் ஒருவர் நேற்று மாண்டார். தொற்றுக்கான அறிகுறிகளோடு அவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மலேசியாவில் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்தது.

