பட்டத்தில் சிக்கி காற்றில் பறந்த மூன்று வயது சிறுமி

1 mins read
1b8a248d-833f-4117-8cc6-bbee0100aa63
வியட்னாமில் பட்டத்தின் வாலில் சிக்கிக்கொண்ட சிறுமியைக் கையில் ஏந்திப் பிடிக்க பார்வையாளர்கள் ஒன்றுதிரண்ட காட்சி. படம்: ராய்ட்டர்ஸ் -

ஹ்சிஞ்சு: வியட்­னா­மின் நான்­லியோ மீன்­பிடி துறை­மு­கத்­தில் நேற்று அனைத்­து­லக பட்­டம் விடும் விழா நடை­பெற்­றது.

அப்­போது வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருந்த 3 வயது சிறு­மி­யைப் பட்­டம் ஒன்­றின் வால் சுற்­றிக்­கொண்­டது. பட்­டம் அப்­ப­டியே அச்­சி­று­மி­யை சில மீட்­டர் உய­ரத்­திற்­குக் காற்­றில் தூக்­கிச் சென்று பந்­தா­டி­யது. சுமார் 10 வினா­டி­க­ளுக்­குப் பிறகு பட்­டம் கீழே விழுந்­த­தும் சிறுமி பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டாள்.

சிறு­மிக்­குக் கழுத்­தில் சிராய்ப்­பு­கள் ஏற்­பட்­டன. உட­ன­டி­யாக பட்­டம் விடும் விழாவை ரத்து செய்த ஹ்சிஞ்சு நகர அர­சாங்­கம், பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மறு உறுதி செய்­யப்­படும் என்றது.