'தேர்தலுக்கான சாத்தியம் ஆராயப்படுகிறது'

'தேர்தலுக்கான சாத்தியம் ஆராயப்படுகிறது'

2 mins read
1a7b2eec-656c-40ef-87e2-06ad7ad6b03e
படம்: ராய்ட்டர்ஸ் / லிம் ஹுயே தெங் -

புத்­ர­ஜெயா: பெரிக்­கத்­தான் நேஷ­னல் அர­சாங்­கம் பொதுத் தேர்­தலை முன்­கூட்டியே நடத்­து­வ­தற்­கான சாத்­தி­யத்தை மிக­வும் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­வ­தாக தேசிய முன்­ன­ணி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் அன்­வர் மூசா கூறி­யுள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­திற்­குப் புதிய மற்­றும் வலு­வான ஆட்சி அமைய வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

"எவ்­வா­றா­யி­னும், பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுப்­ப­தும் கொவிட் -19 தொற்­று­நோ­யைச் சமா­ளிப்­ப­தும் தான் எங்­க­ளின் இப்­போ­தைய முன்­னு­ரி­மை­கள் ஆகும்.

"நாங்­கள் பொறுப்­பான அர­சாங்­க­மாக இருக்க விரும்­பு­கி­றோம். தேர்­த­லுக்கு அழைப்பு விடுத்து, அர­சாங்­கத்­தைக் கலைக்­கக்­

கூ­டாது," என்று மூசா சொன்னார்.

பேராக்­கில் நடந்த சிலிம் இடைத்­தேர்­த­லில் வெற்றி பெற்ற போதி­லும், வர­வி­ருக்­கும் சாபா மாநி­லத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தில் மெத்­த­ன­மாக இருந்­து­விட வேண்­டாம் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டார்.

"14வது பொதுத் தேர்­த­லுக்கு முன்­னர் கோலா காங்­சர் மற்­றும் சுங்கை பெசார் இடைத்­தேர்­தல்­களில் தேசிய முன்னணி வெற்றி பெற்­றது நமக்குத் தெரி­யும்.

"அதற்­குப் பிறகு பொதுத் தேர்­த­லில் நாம் எளி­தில் வென்று விடு­வோம் என்று மக்­கள் நினைத்­தார்­கள், ஆனால் அப்­படி நடக்­கவில்லை.

"சாபா தேர்­தல் முற்­றி­லும் மாறு­பட்ட ஒன்று. அங்­குள்ள நிலை­மையை நாம் சரி­யாக புரிந்­து­கொள்ள வேண்­டும்," என்­றார்.

பேராக் மாநில ஸ்லிம் தொகு­தி­யில் நடை­பெற்ற இடைத்­தேர்­த­லில் தேசிய முன்­ன­ணி­யின் முஹ­மட் சைய்டி அஸிஸ் 10,945 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் சுயேட்சை வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்­றார்.

இதற்­கி­டையே, சாபா சட்­ட­மன்­றத் தேர்­த­லி­லும் தேசிய முன்­னணி இதே­போன்ற வெற்­றி­யைப் பதிவு செய்­யும் என அம்னோ மற்­றும் தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர் அக­மட் ஸாஹிட் ஹமிடி நம்­பிக்­கைத் தெரி­வித்­தார்.