ஜகார்த்தா: இந்தோனீசியாவில் வேகமாக பரவக்கூடிய உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜகார்த்தாவை தளமாகக் கொண்ட மூலக்கூறு உயிரியலுக்கான மையம் நேற்று தெரிவித்தது.
இந்த மையத்தால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் D614G என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா கிருமி இருப்பது கண்டறியப்பட்டது. இந்தோனீசியாவில் சில நாட்களாக தொற்று அதிகரிப்பதற்குக் காரணம் இதுவாக இருக்கக்கூடுமோ என்றும் மையம் ஆராய்ந்து வருகிறது. இந்த கிருமி ஏற்கெனவே மலேசிய மாதிரிகளிலும் இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்தோனீசியாவில் நேற்று 2,858 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தமாக 172,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,343 பேர் மாண்டனர்.

