விஸ்கான்சின் மாநிலத்திற்குச் செல்லும் டிரம்ப்

கெனோஷா: அமெ­ரிக்­கா­வின் விஸ்­கான்­சி­னின் கெனோஷா நக­ரில் சனிக்­கி­ழமை நடந்த ‘பிளாக் லைவ்ஸ் மேட்­டர்’ அணி­வ­குப்­பில் சுமார் ஆயி­ரம் பேர் கலந்­து­கொண்­ட­னர்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை 29 வயது கறுப்­பின ஆட­வ­ரான ஜேக்­கப் பிளாக் என்பவர், வெள்ளைக்கார போலிஸ் ஒரு­வ­ரால் ஏழு முறை சுடப்­பட்­ட­தைத் தொடர்ந்து அங்கு ஆர்ப்­பாட்­டங்­க­ளும் வன்­மு­றைகளும் தூண்டப் பட்டன.

உயிர் தப்­பிய பிளாக், மோச­மாக காய­ம­டைந்­த­தோடு இடுப்­பிற்­குக் கீழ் செயல் இழந்து போயுள்­ளார். அவ­ரால் மீண்­டும் எழுந்து நடக்க முடி­யுமா என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை.

துப்­பாக்­கிச் சூட்­டுக்கு முந்­திய குற்­றச்­சாட்­டு­கள் குறித்து அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்ள நீதி­மன்ற விசா­ர­ணை­யில், மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­ப­டியே, பிளாக் காணொளி மூலம் பங்­கேற்­பார் என்­றும் அப்­போது தான் குற்­ற­வாளி அல்ல என அவர் கூறு­வார் என்­றும் வழக்­க­றி­ஞர் சொன்­னார்.

இந்­நி­லை­யில் தன் மக­னுக்காக நியா­யம் கேட்டு நடந்த அணி­வ­குப்­பில் கலந்­து­கொண்ட ஜேக்­கப் பிளாக்­கின் தந்தை, ஆர்ப்­பாட்­டக்­கா­ர­ர்­கள் சூறை­யா­டல், காழ்ப்­பு­ணர்ச்­சி­யைத் கைவிட வேண்­டு­மென்று கேட்­டுக் கொண்­டார்.

இதற்­கி­டையே, செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று டிரம்ப் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு ஆத­ர­வான ஆர்ப்­பாட்­டங்­க­ளால் சூழப்­பட்­டுள்ள கெனோ­ஷா ­ந­க­ருக்­குச் செல்­ல­வுள்­ள­தாக வெள்ளை மாளிகை செய்தி கூறு­கிறது.

அப்­போது அவர் சட்ட அம­லாக்கத் துறை அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்து வன்­மு­றை­யால் ஏற்­பட்ட சேதங்­கள் குறித்து கேட்­ட­றி­வார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

காய­ம­டைந்த ஜேக்­கப் பிளாக்­கின் குடும்­பத்தை டிரம்ப் சந்­திப்­பாரா என்­பது குறித்து இன்­னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

விஸ்­கான்­சின் மாநி­லத்­தில் இரண்டு முறை வென்ற ஒபா­மாவை, 2016ல் டிரம்ப் வெறும் 20,000 வாக்­கு­களில் வென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!