ஆஸ்திரேலியா: முப்பது ஆண்டு காணாத மந்தநிலை

ஆஸ்திரேலியா: முப்பது ஆண்டு காணாத மந்தநிலை

1 mins read
1b1949fc-e96d-4757-b7b5-e8e460a61081
-

சிட்னி: கிருமிப் பரவல் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு மந்தநிலையில் மூழ்கியுள்ளது.

முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% சுருங்கியது. 1959ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.3% வீழ்ச்சி அடைந்த பின்னர் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

இவ்வாண்டின் தொடக்கத்தில் காட்டுத்தீ காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, பின்னர் கிருமிப்பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாகவும் அங்கு பொருளியல் வீழ்ச்சி கண்டது.