டிரம்ப்பிடம் மிட்டாய் வாங்கிச் சாப்பிட கிம் தயக்கம்: முன்னாள் உதவியாளர்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈராண்டுகளுக்கு முன்னர் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னைச் சிங்கப்பூரில் சந்தித்தபோது அவருக்கு சில ‘டிக் டேக்’ (Tic Tac) மிட்டாய்களைக் கொடுத்திருந்தார்.

“அப்போது கிம்மின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. இது ஏதோ தன்னை நஞ்சு வைத்து கொல்லும் சதி என எண்ணியிருப்பார் போலும். என்ன செய்வதென்று தெரியாமல் அவர் சற்று திணறியது போல இருந்தது,” என்று திரு டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர் சேரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.

திரு கிம்மின் தயக்கத்தைக் கண்டு நகைத்த திரு டிரம்ப், அதே சிறு மிட்டாய்கள் வைக்கப்பட்டிருந்த பேழையிலிருந்து சில மிட்டாய்களை எடுத்து தம் வாய்க்குள் போட்டுக்கொண்டார். ஆபத்தில்லை என்பதை உணர்ந்த திரு கிம், இறுதியில் திரு டிரம்ப் வழங்கிய மிட்டாய்களை ஏற்றுக்கொண்டார்.

சிங்கப்பூரில் அவ்விரு தலைவர்களுக்கு இடையே நடந்தவற்றை மிகவும் விரிவாக தமது புதிய நூலில் எழுதியிருக்கிறார் முன்னாள் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் சேரா சாண்டார்ஸ்.

திரு டிரம்ப் பலமுறை பொய்யுரைத்திருப்பதாகக் கூறும் அவரது விமர்சகர்கள் திருமதி சாண்டர்சைப் பற்றி கிட்டத்தட்ட அதே குறைகூறல்களையும் முன்வைத்துள்ளனர். திரு டிரம்ப்போ, திருமதி சாண்டர்சை தமக்கு மிக நெருக்கமான ஆதரவாளராகக் கருதினார். திரு டிரம்ப்பை விட்டுக்கொடுக்காமல் செய்தியாளர்களிடம் ஆணித்தரமாக பேசி வந்த திருமதி சாண்டர்ஸ், திரு டிரம்ப்பால் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்ததாகக் கூறினார்.

‘ஸ்பீகிங் போர் மைசெல்ப்’ (Speaking For Myself) என்ற தமது புத்தகத்தில் திருமதி சாண்டர்ஸ், திரு டிரம்ப்புடன் தாம் பணியாற்றிய அனுபவத்தையும் தமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் விவரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!