தென்கொரியாவைச் சுழற்றியடித்த 'மேசக்'; ஒருவர் பலி

தென்கொரியாவைச் சுழற்றியடித்த 'மேசக்'; ஒருவர் பலி

1 mins read
af32194f-66b7-4db8-895b-d08358f6c242
தென்கிழக்குத் துறைமுக நகரான உல்சனில் மின்கம்பம் முறிந்து, கார் மீது விழுந்தது. படம்: ஏஎஃப்பி -

தென்கொரியாவைத் தாக்கிய 'மேசக்' சூறாவளியால் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்; 2,200க்கு மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ஏராளமான மின்கம்பங்களும் மரங்களும் முறிந்து விழுந்தன. கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த காற்றால் தமது வீட்டின் சன்னல் கண்ணாடி பெயர்ந்து, மேலே விழுந்ததில் பெண் ஒருவர் மரணமடைந்தார்.

வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்பதனப் பெட்டி மேலே விழுந்ததில் 60 வயதுகளில் இருந்த ஆடவர் ஒருவர் காயமடைந்தார். நாட்டின் தென்பகுதியிலும் ஜிஜு தீவிலும் கிட்டத்தட்ட 120,000 வீடுகள் மின்சாரமின்றி நேற்று முன்தினம் இரவைக் கழிக்க நேரிட்டது.

குறிப்புச் சொற்கள்