மலேசியாவின் சாபாவிலுள்ள டவாவ் சிறைச்சாலையில் 7 கொவிட்-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அவர்களில் ஐவருக்கு, அங்கிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட போலிஸ் தலைமையகத்திலிருந்து கிருமித்தொற்று பரவியதாகவும் அவர்களிடமிருந்து சிறைக்கைதிகள் இருவருக்கு கிருமித்தொற்று பரவியதாகவும் கூறப்பட்டது.
எழுவரில் அறுவருக்கு நேற்றும் ஒருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமையும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கிருமித்தொற்று கண்டவருக்கு பென்டெங் லஹாட் டத்து குழுமத்திலிருந்து கிருமி தொற்றியிருக்கலாம் என்று கூறப்பட்டது. லஹட் டத்து போலிஸ் தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு, அதே நாளில் கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. 43 மலேசியரான அவர், லகட் டத்து போலிஸ் தலைமையகத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்ற ஆறு பேரும் சட்டவிரோத குடியேற்கள் என்றும் அவர்களில் நால்வர் பிலிப்பீன்சிலிருந்தும் இருவர் இந்தோனீசியாவிலிருந்தும் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறுவரில் நால்வர் லகட் டத்து போலிஸ் தலைமையகத்தில் இருந்தவர் என்றும் கிருமி தொற்றியவர்களுடன் அவர்கள் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய கிருமித்தொற்று குழுமத்தில் 14 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைதிகள், சிறை ஊழியர்கள், ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், போலிஸ் அதிகாரிகள் என 336 பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

