வாஷிங்டன்: ஊழியர்களுக்கு இனவாத எதிர்ப்புப் பயிற்சிகள் வழங்குவதை நிறுத்தும்படி
அரசாங்க அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அத்தகைய பயிற்சிகள் அமெரிக்கக் கொள்கைகளுக்கு எதிரானவை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியது. வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
வெள்ளையர்களின் ஆதரவைப் பெற அதிபர் டிரம்ப் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நேரத்தில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்கள் மட்டுமே இனவாதப் போக்குடன் நடந்துகொள்வதாக இனவாத எதிர்ப்புப் பயிற்சிகள் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. மக்களின் வரி பணத்தைப் பயன்படுத்தி சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய இத்
தகைய பயிற்சிகளுக்கு ஊழியர்களை அனுப்ப வேண்டாம் என்று அரசாங்க அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கறுப்பினத்தவர்களை போலிசார் சுட்டுக் கொல்வதை எதிர்த்து அமெரிக்காவில் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

