ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் அஞ்சல்பெட்டியில் விதைகள் அடங்கிய மர்மப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு விதைகளின் விற்பனைக்கு அமேசான் டாட் காம் இணைய வர்த்தக நிறுவனம் தடை செய்துள்ளது.
பெரும்பாலான பொட்டலங்களில் சீனாவின் அஞ்சல் முத்திரை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தாவர ரகங்களின் விதைகள் மர்மமான முறையில் அமெரிக்காவுக்குள் விநியோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை விதைக்க வேண்டாம் என அமெரிக்க விவசாயத் துறை அப்போது கேட்டுக்கொண்டது.
வெளிநாடுகளில் இருந்து வரும் விதைகள் அமெரிக்க மண்ணுக்கு ஏற்புடையனவாக இருக்காது என்றும் அவற்றை விதைப்பதால் இங்குள்ள பயிர்களுக்குக் கேடு நேரிடும் என்றும் தாவரவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதனைக் காரணம் காட்டிய அமேசான், அமெரிக்க விதைகளின் விற்பனையை மட்டும் அனுமதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

