சீரழித்த சூறாவளி; களமிறங்கிய கிம்

சீரழித்த சூறாவளி; களமிறங்கிய கிம்

1 mins read
b52b4d88-5139-4f74-b0b6-95e1663756a2
பாதிக்கப்பட்ட இரு மாகாணங்களில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சிகளில் ஆளும் கட்சி ஆதர வாளர்கள் 12,000 பேர் களமிறங்க வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

கடுமையான மேசாக் சூறாவளி வடகொரியாவின் புறநகர் பகுதிகள் சிலவற்றைச் சீரழித்துவிட்டது.

பாதிக்கப்பட்ட இரு மாகாணங்களில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சிகளில் ஆளும் கட்சி ஆதர வாளர்கள் 12,000 பேர் களமிறங்க வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து அரசாங்க கட்டடங்கள் நீரில் மிதக்கும் நிலையை நேற்று சுற்றிப்பார்த்த திரு கிம், நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

அது தொடர்பான படத்தை கேசிஎன்ஏ அரசாங்கத் தொலைக்காட்சி காட்டியது.

குறிப்புச் சொற்கள்