தேர்தல் பணியின்போது பணியாளர் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு

தேர்தல் பணியின்போது பணியாளர் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு

1 mins read
f441de4b-1d4d-4650-b1b2-b0c19d660056
-

சென்னை: தேர்­தல் பணி­யில் ஈடு­படும் பணி­யா­ளர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழக்க நேரிட்­டால் அவ­ரது குடும்­பத்­திற்கு 30 லட்­சம் ரூபாய் இழப்­பீடு வழங்­கப்­படும் என இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக தலை­மைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாகு வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், தேர்­தல் பணி­யின்­போது காய­ம­டை­யும் தேர்­தல் பணி­யா­ளர்­க­ளுக்­கும் இறந்­து­போ­கும் பணி­யா­ளர்­க­ளின் வாரி­சு­க­ளுக்­கும் உரிய இழப்­பீடு வழங்­கப்­பட வேண்­டும் எனும் கோரிக்கை நீண்ட நாட்­க­ளாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

"தேர்­தல் பணி­யில் இருக்­கும் மத்­திய ஆயு­தப்­படை வீரர் மற்­றும் பணி­யா­ளர்­கள் கொவிட்-19 நோயி­னால் மர­ண­ம­டைய நேரிட்­டால் அவ­ரு­டைய குடும்­பத்­தி­ன­ருக்கு ரூ.30 லட்­சம் இழப்­பீட்டை வழங்­கு­வது பற்றி பரி­சீ­லனை செய்ய கோரிக்­கை­கள் வரப்­பெற்­றன.

"எனவே தேர்­தல் பணி­யில் ஈடு­ப­டும்­போது கொவிட-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழக்­கும் ஆயு­தப்­படை வீரர்­கள் உட்­பட அனைத்து தேர்­தல் பணி­யா­ளர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் ரூ.30 லட்­சம் இழப்­பீ­டாக வழங்க இந்­திய தேர்­தல் ஆணை­யம் முடிவு செய்­துள்­ளது," என்று சத்­ய­பி­ரதா சாகு தெரி­வித்­துள்­ளார்.

தேர்­தல் பணி­யில் ஈடு­படும் போது எதிர்­பா­ராத வித­மாக சமூக விரோ­தி­கள், பயங்­க­ர­வா­தி­க­ளால் நிக­ழும் வெடி­குண்டு சம்­ப­வங்­கள், ஆயுதத் தாக்­கு­தல் போன்ற வன்­மு­றை­யில் உயி­ரி­ழக்­கும் தேர்­தல் பணி­யா­ளர்­க­ளின் குடும்பத்தாருக்கு இந்த தொகை இழப்­பீ­டாக வழங்­கப்­ப­டு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தற்­போது கொவிட்-19 நோயி­னால் ஏற்­படும் இறப்­பை­யும் இந்­தப் பட்­டி­ய­லில் சேர்த்து அதற்­கேற்ற வகை­யில் இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் முந்­தைய உத்­த­ர­வு­களில் திருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதாக சத்­ய­பி­ரதா சாகு தெரி­வித்­துள்­ளார்.