தடுப்பு மருந்து விவகாரத்தில் டிரம்ப்பை நம்பமுடியாது: கமலா

வாஷிங்­டன்: கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான மருந்து கண்­டு­பி­டிக்­கப்­படும் சாத்­தி­யத்­தில் அதி­பர் டிரம்ப்­பின் வாக்­கு­று­தியை மட்­டும் எடுத்­துக்­கொள்ள முடி­யாது என்­றும் அதில் நம்­ப­கத்­தன்மை இல்லை என்­றும் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் துணை அதி­பர் வேட்­பா­ளர் கமலா ஹாரிஸ் (படம்) கூறியுள்ளார்.

கொள்­ளை­நோய் தொடர்­பி­லான நிபு­ணத்­துவ கருத்­து­களை அடக்கி ஒடுக்­கு­வ­தில் டிரம்ப் கைதேர்ந்­த­வர் எனக் கூறிய திரு­வாட்டி கமலா, தடுப்பு மருந்து கண்­டு­பி­டிக்­கப்­படும் விவ­கா­ரத்­தி­லும் அவ­ரது நட­வ­டிக்கை தொட­ர­லாம் என தாம் கவ­லைப்­ப­டு­வ­தா­கத் தெரிவித்தார்.

நவம்­பர் மாதம் நடை­பெற இருக்­கும் அதி­பர் தேர்­த­லில் கிரு­மித்­தொற்று விவ­கா­ரம் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று கூறப்­பட்டு வந்த நிலை­யில் தேர்­த­லுக்கு முன்­ன­தாக தடுப்பு மருந்­தைப் பயன்­பாட்­டுக்­குக் கொண்­டு­வ­ரப் போவ­தாக திரு டிரம்ப் தெரி­வித்­தி­ருந்­தார். அதன் தொடர்­பில் திரு­வாட்டி கமலா ஹாரிஸ் அளித்த பேட்­டியை சிஎன்­என் தொலைக்­காட்சி நேற்று முன்­தி­னம் ஒளி­ப­ரப்­பி­யது.

“டோனல்ட் டிரம்ப்பை நம்­ப­மாட்­டேன்,” என்று அவர் அந்த பேட்­டி­யில் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­னார். தடுப்பு மருந்­தின் ஆற்­றல் குறித்து நம்­பத்­த­குந்த யாரே­னும் ஒரு­வர் உறுதி அளித்­தால் மட்­டுமே அது குறித்து தாம் சமா­தா­னம் அடை­யப்­போ­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!