23 நாடுகளின் குடிமக்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய தடை

23 நாடுகளின் குடிமக்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய தடை

2 mins read
fb358d53-03be-49d1-9ba8-46fb7e60e057
-

புத்ராஜெயா: கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மேலும் மோசமாகாமல் இருக்க, மலேசியாவுக்குள் நுழைய 23 நாடுகளின் குடிமக்களுக்கு மலேசியக் குடிநுழைவுத் துறை தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அறிவிக்கப்பட்டுள்ள தடை நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ஸ்பெயின், அர்ஜெண்டினா, சிலி, ஈரான், பங்ளாதேஷ், பிரிட்டன், சவூதி அரேபியா, பாகிஸ்தான், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ஜெர்மனி, ஈராக், பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மலேசியக் குடிநுழைவுத் துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

150,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகளைப் பதிவு செய்துள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று இம்மாதம் 3ஆம் தேதியன்று

மலேசிய அரசாங்கம் அறிவித்தது.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் உள்ள மேலும் பல நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அந்த நாடுகளின் குடிமக்களும் மலேசியாவுக்குள் நுழைய முடியாது என்றும் மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

பட்டியலில் இடம்பெறும் நாடு

களின் குடிமக்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டாலும் அவசர விவகாரங்களும் இருநாட்டு உறவு தொடர்பான விவகாரங்களும் இதற்கு விதிவிலக்கு.

நீண்டகால குடிநுழைவு அட்டை வைத்திருந்தாலும் பட்டியலில் இடம்பெறும் நாடுகளைச் சேர்ந்தோர் மலேசியாவுக்குள் நுழைய முடியாது. இது மலேசிய நிரந்தரவாசிகள், 'மலேசியா என் இரண்டாவது வீடு' திட்டத்தில் இணைந்திருப்போர், மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டு நிபுணர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும்.

பட்டியலில் இடம்பெறும் நாடு களைச் சேர்ந்தவர்களில் மலேசியர்களின் கணவர் அல்லது மனைவியாக இருந்தாலும்கூட அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய முடியாது.

மலேசியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களும் இந்த விதிமுறைக்கு உட்பட வேண்டும்.

இந்நிலையில், 23 நாடுகளின் குடிமக்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மலேசிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்துலக வர்த்தகத் தொழிற்சபை

உட்பட பல அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்தத் தடையால் நாட்டின் வர்த்தகம் வெகுவாகப் பாதிப்படையும் என அவை கவலை தெரிவித்தன.