மலேசியாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா

மலேசியாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா

1 mins read
53eab792-36dd-4e0a-9a3f-17590350483a
கோப்புப்படம்: கோலாலம்பூரில் பாதுகாப்புடன் முடிதிருத்தும் ஊழியர். படம்: ராய்ட்டர்ஸ் -

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 62 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் இதுவே ஆக அதிகமான பதிவு.

கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதியன்று 277 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக மலேசியா அறிவித்தது.

அதையடுத்து அன்றாடப் பதிவு 50க்கும் குறைவாக இருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று திடீரென்று அதிகரித்தது.

பாதிக்கப்பட்ட 62 பேரில் 50 பேர் சாபாவில் உள்ள பெந்தேங் லஹாட் டத்துவைச் சேர்ந்தவர்கள். கிருமித்தொற்றுள்ள 62 பேரில் 56 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மலேசியாவில் கிருமித்தொற்றால் இதுவரை 9,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த ஒன்பது பேர் நேற்று மருத்துவமனையி

லிருந்து வீடு திரும்பினர்.