பாகிஸ்தானில் நேற்று மாலை பளிங்கு குவாரி ஒன்று சரிந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேரைக் காணவில்லை என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு பாகிஸ்தானின் மொஹ்மண்டின் சியாரத் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் இந்த குவாரி அமைந்துள்ளது.
கல்லை உடைக்கப் பயன்படுத்தப்படும் கனமான வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் அப்பகுதி நிலையற்றதாக இருந்திருக்கலாம் என போலிசார் கூறினர்.
இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் உட்பட மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்பட்டபோது அந்த இடத்தில் 40 முதல் 50 பேர் வரை இருந்ததாக மொஹமண்ட் மாவட்ட காவல்துறைத் தலைவர் தாரிக் ஹபீப் தெரிவித்தார்.
உயர்தர வெள்ளை பளிங்கிற்காக இந்தப் பகுதி பிரபலமாக அறியப்படுகிறது; இங்கிருந்து பெறப்படும் பளிங்குகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


