மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளிலிருந்து வருவோருக்கு மலேசியா தடை விதித்துள்ளது. இந்தப் பயணத் தடை நேற்று முன்தினம் முதல் நடப்புக்கு வந்தது. 150,000க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கொண்ட நாடுகளில் இருந்து பயணிகள் மலேசியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்தத் தடை பொருந்தும்.
முன்னதாக, இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மலேசியாவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தடை மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் நேற்று மேலும் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

