களங்கம் வராமல் தற்காக்க நஜிப் மனைவி மாதம் $33,000 வழங்கியதாக சாட்சியம்

1 mins read
597c891b-ff7f-4a8a-9306-b3f60bff2b4d
விசாரணைக்காக நேற்று நீதிமன்றம் வந்த திருவாட்டி ரோஸ்மா. படம்: புளூம்பெர்க் -

சமூக ஊட­கங்­களில் தமக்கு எதி­ரா­கப் பரப்­பப்­படும் தக­வல்­க­ளைக் கண்கா­ணித்து தமது பெய­ருக்கு களங்­கம் ஏற்­ப­டா­த­வாறு பார்த்­துக்­கொள்ள முன்­னாள் மலே­சிய பிர­த­மர் நஜிப் ரசாக்­கின் மனைவி திரு­வாட்டி ரோஸ்மா மன்­சூர், 69, பணம் செல­வ­ழித்­த­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அதற்­காக 2012ஆம் ஆண்டு இணை­யத் தற்­காப்­புக் குழு ஒன்­றுக்­குப் பணம் வழங்­கப்­பட்­ட­தாக திரு­வாட்டி ரோஸ்­மா­வின் முன்­னாள் உத­வி­யா­ளர் கூறி­யி­ருப்­ப­தாக மலாய் மெயில் இணை­யச் செய்தி குறிப்­பிட்­டது.

ரைஸால் மன்­சூர் எனப்­படும் அவர், திரு­வாட்டி ரோஸ்­மா­வுக்கு எதி­ரான லஞ்ச ஊழல் வழக்­கில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்­தார்.

"இணை­யம் வழி­யாக தமக்கு எதி­ரா­கத் தெரி­விக்­கப்­படும் ஒவ்­வொரு கருத்­துக்­கும் எதிர்­க­ருத்து அளிக்க வேண்­டிய பொறுப்பு அந்­தக் குழு­வி­டம் தரப்­பட்டு இருந்­தது," என்று கூறிய திரு ரைஸால், அந்த வேலை­க­ளைச் செய்ய அக்­கு­ழு­வி­டம் தரு­மாறு அப்­போது மாதா­மா­தம் 100,000 (S$32,800) ரிங்­கிட் தம்­மி­டம் கொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார்.

1.25 பில்­லி­யன் ரிங்­கிட் மதிப்­பி­லான சோலார் திட்­டத்தை அளிக்க ஜேபாக் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தி­டம் 187.5 மில்­லி­யன் கோரிய குற்­றச்­சாட்டை திரு­வாட்டி ரோஸ்மா எதிர்­நோக்­கு­கி­றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்