'கொரோனா பரவலைத் தடுக்க, கண்டதும் சுட்டுக்கொல்ல வடகொரியா உத்தரவு'

'கொரோனா பரவலைத் தடுக்க, கண்டதும் சுட்டுக்கொல்ல வடகொரியா உத்தரவு'

1 mins read
0e6cf7fe-5820-4843-b679-aea7803c9944
படம்: ஏஎஃப்பி -

சீனாவின் நட்பு நாடாக இருந்தபோதும், கொவிட்-19 பரவத் தொடங்கிய, அதாவது இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சீனாவுடனான எல்லையை மூடி வைத்துள்ளது வடகொரியா.

கொவிட்-19 பரவத் தொடங்கினால் அதனைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்று கருதும் வடகொரியாவில் இதுவரை கிருமித்தொற்று பரவல் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சீனாவுடனான எல்லைப் பகுதி மூடப்பட்டிருப்பதால், அங்கிருந்து பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்ததாகவும் அதனால் அதிகாரிகள் அதன் தொடர்பில் தலையிடுவதாகவும் அமெரிக்க - கொரியப் படைகளின் (USFK) கமாண்டர் ராபர்ட் அப்ராம்ஸ் கூறியுள்ளார்.

சீன எல்லையிலிருந்து வடகொரியாவில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு இடைத்தாங்கு பகுதியை உருவாக்கியுள்ளது வடகொரியா. சீனாவிலிருந்து பொருட்களை வடகொரியாவுக்குள் கடத்துபவர்கள் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும்.

ஆனால், அந்த இடைத்தாங்கு பகுதியில் சிறப்பு நடைமுறைப் படைகளை (North Korean SOF) வடகொரியா நிறுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் யாரையேனும் பார்த்தால் சுட்டுக்கொல்லவும் அவர்களுக்கு அனுமதி உள்ளாது என திரு அப்ராம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்