மூளையையும் பாதிக்கும் கொவிட்-19: ஆய்வு

மூளையையும் பாதிக்கும் கொவிட்-19: ஆய்வு

2 mins read
488cbaf0-1196-4a7a-bbc9-2a57b21966a6
மூளை பாதிப்பு, மத்திய நரம்பு அமைப்பில் பாதிப்பு, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் பாதையை ரத்தக் கட்டி அடைப்பது, குல்லைன் பார் சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகள் கொவிட்-19 நோயாளிகளிடையே காணப்படுவதை மருத்துவர்கள் சில காலமாக அறிந்துள்ளனர். படம்" ஏஎஃப்பி -

மூளை பாதிப்பு, மத்திய நரம்பு அமைப்பில் பாதிப்பு, மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் பாதையை ரத்தக் கட்டி அடைப்பது, குல்லைன் பார் சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகள் கொவிட்-19 நோயாளிகளிடையே காணப்படுவதை மருத்துவர்கள் சில காலமாக அறிந்துள்ளனர்.

ஆனால், கொவிட்-19 நோயாளிகளில் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. கொவிட்-19க்கு காரணமான SARS-CoV-2 கிருமித் தொற்றின் பக்க விளைவு அல்லது நேரடி கிருமித்தொற்று இதற்குக் காரணமாக இருக்கலாமென கருதப்படுகிறது.

கொவிட்-19க்கு காரணமான கிருமி மனிதர்களின் சுவாசப் பாதையில் உள்ள ACE-2 உடன் இணைந்து, பின்னர் பல்கிப் பெருகுகிறது. மிகச் சிறிய அளவில் ACE-2 மனித மூளையிலும் கணப்படுவதாகக் கூறப்படுகிறது.

யேல் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனாவைரஸ் மூளை செல்களை ஊடுருவுவதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆய்வாளர்களின் மறுஆய்வுக்காகக் காத்திருக்கும் இந்த புதிய ஆய்வு முடிவுகளின்படி, மூளை செல்களில் ஊடுருவி பெருகும் கொரோனாகிருமியால் அருகில் உள்ள மூளை செல்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதாகக் குறிப்பிடுகிறது.

கொவிட்-19ஆல் உயிரிழந்தவரின் மூளை செல்களைக் கொண்டு ஆய்வு நடத்திய ஆய்வாளர்கள், ACE-2 கூறுகள் மூளையில் நுழைவதைத் தடுப்பதன் மூலம் கொரோனா வைரசால் மூளை பாதிக்கப்படுவதைத் தடுக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றனர்.

மரபணு மாற்றத்தின் மூலம் ACE-2 கூறுகளை மூளையில் மட்டுமே கொண்ட இரண்டு எலிகள், ACE-2 கூறுகளை சுவாசப் பாதையில் மட்டுமே கொண்ட 2 எலிகள் ஆகியவற்றுக்கு கொரோனா கிருமி தொற்று ஏற்படச் செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ACE-2 கூறுகள் மூளையில் இருந்த எலிகளின் எடை வெகுவாகக் குறைந்ததுடன் ஆறு நாட்களுக்குள் அவை உயிரிழந்தன. ஆனால், சுவாசப் பாதையில் ACE-2 கூறுகள் இருந்த எலிகளில் இவ்விரு மாற்றங்களும் நிகழவில்லை.

கொரோனா வைரஸ், மனித மூளையின் செல்களை அழிக்காவிட்டாலும், அவற்றைப் பயன்படுத்தி பெருகியதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கிருமி மூளை செல்களைத் தாக்கியபோதும் நோய்த் தடுப்பாற்றல் அவர்களுக்கு உருவாகாதது அக்கறைக்குரிய அம்சம் என்றனர் ஆய்வாளர்கள்.

நரம்பு செல்கள், கொரோனா கிருமிகளின் இலக்கானால், அது மிக மோசமான விளைவுகளை மூளை செல்களில் ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்