மலேசிய உணவகங்கள் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க அனுமதி

மலேசிய உணவகங்கள் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க அனுமதி

2 mins read
ee7b2635-ac5c-4a09-bebd-c338a83deed7
கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

உண­வ­கங்­களும் சிறு பகு­தி­வா­ரிக் கடை­களும் அதி­காலை 2 மணி வரை திறந்­தி­ருக்க மலே­சிய அர­சாங்­கம் அனு­மதி அளித்து உள்­ளது. இந்­தப் புதிய தளர்வு நேற்று முதல் நடப்­புக்கு வரு­வ­தாக மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

பெரும் வரு­வாய் இழப்பு ஏற்­ப­டு­வ­தாக கடைக்­கா­ரர்­கள் விடுத்த கோரிக்­கையை ஏற்று அவை இயங்­கும் நேரத்தை நீட்­டிக்க தேசிய பாது­காப்பு மன்­றம் அனு­மதி அளித்து உள்­ள­தாக அவர் கூறி­னார்.

"ஏரா­ள­மான கோரிக்­கை­கள், குறிப்­பாக லங்­காவி போன்ற சுற்­று­லாத்­த­லங்­களில் நிறைய பேர் வேண்­டு­கோள் விடுக்­கி­றார்­கள். பொழுது­ போக்­குக்­கூ­டங்­களில் அனு­மதி இல்லை என்­ப­தால் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு சாப்­பி­ட­வா­வது நேர நீட்­டிப்பு வேண்­டும் என்­றும் கோரப்­பட்­டது. எனவே அதி­காலை 2 மணி வரை திறந்­தி­ருக்க உண­வ­கங்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­கிறது," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார் திரு இஸ்­மா­யில் சாப்ரி.

ஜூன் மாதம் முதல் கட்­டம் கட்­ட­மாக கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி வரும் மலே­சி­யா­வில் உண­வ­கங்­கள் முழு­மை­யாக இயங்க அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ளன. ஆயி­னும் நள்­ளி­ர­வுக்கு மேல் அவற்­றுக்கு அனு­மதி இல்லை என்ற உத்­த­ரவு நடப்­பில் இருந்து. அதில் இனி தளர்வு இருக்­கும்.

இதற்­கி­டையே, பள்­ளி­வா­சல்­களில் தொழு­கைக்கு தற்­போது வெளி­நாட்­டி­னர் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாக மலாய் மெயில் இணை­யச் செய்தி கூறி­யது. கிரு­மிப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­யாக வெளி­நாட்­டி­னர் பள்­ளி­வா­சல்க­ளைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என மலே­சிய அர­சாங்­கம் தடை விதித்து இருந்­தது.

சாபா, கெடா மாநி­லங்­க­ளின் சில பகு­தி­களில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து அந்­தப் பகு­தி­களில் மட்­டும் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தொடங்கி இம்­மா­தம் 25ஆம் தேதி வரை நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்படு­வ­தாக திரு இஸ்­மா­யில் சாப்ரி தெரி­வித்­தார்.