வாஷிங்டன்: சீனாவிலிருந்து கிருமி பரவுவதைத் தடுக்க, சீனாவுடனான எல்லையில் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல வடகொரியா உத்தரவிட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே ஒரு கி.மீ முதல் 2 கி.மீ வரை புதிய இடைவெளியை வடகொரியா அறிவித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது. கிருமித்தொற்றை கட்டுப்படுத்த வடகொரியா சீனாவுடனான எல்லையை ஜனவரியில் மூடியது. ஜூலையில் அவசரகால நடவடிக்கையை உச்சநிலைக்கு உயர்த்தியது.

