உலகிலேயே மிக வயதான மலைப்பாம்பு முட்டையிட்டது; ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

1 mins read
4fa0ca72-0a90-451f-a735-0ed590dc8447
அதன் 7 முட்டைகளில் 2 மரபணு சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மூன்று முட்டைகள் இன்குபேட்டரில் வைத்து அடைகாக்கப்பட்டுள்ளன. இரண்டு முட்டைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.  படங்கள்: செயின்ட் லூயிஸ் விலங்கியல் தோட்டம் -

அமெரிக்காவின் செயின் லூயிஸ் விலங்கியல் தோட்டத்தில் 62 வயதான மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகள் இட்டுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த மலைப்பாம்பு மற்றொரு ஆண் மலைப்பாம்பை கடந்த 15 ஆண்டுகளாகச் சந்தித்ததில்லை.

ஆண் மலைப்பாம்புகள் இல்லாதபோதும் பந்து மலைப்பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக மலைப்பாம்புகள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மட்டுமே வாழக்கூடியவை. ஆனால், இந்த பாம்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட கூடுதலாக 22 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறது.

ஆகவே, ஆக அதிக காலம் உயிர் வாழும் மலைப்பாம்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதே விலங்கியல் தோட்டத்தில் பந்து மலைப்பாம்பு ஒன்று அதிகபட்சமாக 47 ஆண்டுகள் வாழ்ந்து வந்தது.

1961ஆம் ஆண்டு விலங்கியல் தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட அந்த மலைப்பாம்புக்கு அப்போது வயது 3 என்று கூறப்பட்டது.

அதன் 7 முட்டைகளில் 2 மரபணு சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மூன்று முட்டைகள் இன்குபேட்டரில் வைத்து அடைகாக்கப்பட்டுள்ளன. இரண்டு முட்டைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.