கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்; 74 பேர் கைது

கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்; 74 பேர் கைது

2 mins read
089ab8d3-571e-40fa-bb15-fae1d395b9cb
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நடப்­பில் உள்ள கட்­டுப்­பாடு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து விக்­டோ­ரி­யா­வில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­ 74 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இரண்­டா­வது நாளாக தொடர்ந்த இந்த ஆர்ப்­பாட்­டத்­தின் போது சுகா­தார விதி­மு­றை­களை மீறி­ய­தாக 176 பேருக்கு அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. முக்­கிய இட­மான குயின் விக்­டோ­ரியா சந்­தை­யில் பழம் மற்­றும் காய்­கறி கடை­கள் வழி­யாக ஆர்ப்­பாட்­டக் குழு ஒன்று அணி­வ­குத்­துச் சென்­றது.

அப்­போது அவர்­கள் போலிஸ்­கா­ரர்­கள் மீது பழங்­களை வீசு­வது தொலைக்காட்சி ஒன்றின் கேமராவில் பதி­வா­கி­யுள்­ளது.சுமார் 200 முதல் 250 பேர் வரை ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.சனிக்­கி­ழ­மை­யன்று ஆங்­காங்கே நடந்த சிறிய பேர­ணி­களில் 14 பேர் கைது செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கிரு­மித்­தொற்று மைய­மாக விளங்­கிய விக்­டோ­ரி­யா­வில் தின­சரி தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்து வரு­கிறது. இத­னால் இன்று முதல் அங்கு கட்­டுப்­பா­டு­களில் சில தளர்­வு­கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன.

இதன்­படி ஒரு­நா­ளைக்கு மக்­கள் வெளி­யில் இரண்டு மணி நேரம் அதி­கம் செல­விட முடி­யும். மற்­றும் இரவு நேரக் கட்­டுப்­பாடு ஒரு மணி நேரம் குறை­யும் என்­றார் விக்­டோ­ரியா மாநில முதல்­வர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ்.

ஆகஸ்ட் மாதத் தொடக்­கத்­தில் ஒரே நாளில் 700 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வான நிலை­யில், அங்கு ஆறு வாரங்­க­ளுக்­குக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­பட்­டன.

இதை­ய­டுத்து தொற்று சம்­ப­வங்­கள் அங்கு குறை­யத் தொடங்­கின. நேற்று புதி­தாக 41 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர், ஏழு பேர் மாண்­ட­னர்.