கொவிட்-19: இந்தோனீசிய இடுகாடுகளில் இடப்பற்றாக்குறை

1 mins read
c138b25c-a533-46d9-b6a8-fcd38fe5eba7
-

கிழக்கு ஜகார்த்தாவின் பொன்டோக் ரங்கூன் இடுகாட்டில் கொவிட்-19 நோயால் உயிரிழந்தோரைப் புதைப்பதற்கான இடம் கூடிய விரைவில் தீர்ந்துபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7,000 மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த இடுகாட்டில் 1,100 இடங்களுக்கு மட்டும் இடம் இருப்பதாக அதன் நிர்வாக அதிகாரி திரு நடிர் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தின் நடுவுக்குள் இந்த இடுகாட்டில் கிட்டத்தட்ட புதிய சடலங்களைப் புதைப்பதற்கு இடமே இல்லாமல் போகலாம் என்று அவர் கூறினார்.

பொண்டோக் ரங்கூன் இடுகாட்டில் மாதத்திற்குச் சராசரியாக 400 சடலங்கள் புதைக்கப்படுகிறது. 'கொவிட்-19' இடுகாடாக இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட எட்டு புதிய நிலப்பகுதிகள் திறக்கப்பட்டன. அங்கு இதுவரை 2,623 பேர் புதைக்கப்பட்டனர்.