தடுப்பு மருந்தில் சீனா தீவிரம்; பரிசோதனைகள் முடியும் முன்பே ஆயிரக்கணக்கில் பொதுமக்களுக்கு வழங்கியது

கொவிட்-19 தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் முற்றிலுமாக நிறைவடைவதற்கு முன்பாகவே ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கி, அதன் மூலம உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது சீனா.

சீனா­வில் தயா­ரா­கி­வ­ரும் கொரோனா கிரு­மித் தடுப்பு மருந்து நவம்­பர் மாதம் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு தயா­ரா­கக்­கூ­டும் என அந்­நாட்டு தொற்­று­ நோய் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் தெரி­வித்து உள்­ளார்.

நான்கு வித­மான தடுப்பு மருந்தை சீனா பரி­சோ­தித்து வரு­கிறது. அந்­தப் பரி­சோ­தனை தற்­போது இறு­திக்­கட்­டத்தை அடைந்து உள்­ளது. இவற்­றில் மூன்று தடுப்பு மருந்து ஏற்­கெ­னவே அத்­தி­யா­வ­சி­யப் பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கிறது. ஜூலை மாதம் தொடங்­கப்­பட்ட அவ­ச­ர­நி­லைப் பயன்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் அவர்­க­ளுக்கு அந்­தத் தடுப்பு மருந்து தரப்­பட்டு வரு­கிறது.

மூன்­றாம் கட்ட, இறு­திப் பரி­சோ­தனை சுமு­க­மாக நடை­பெற்று வரு­வ­தா­க­வும் நவம்­பர் அல்­லது டிசம்­ப­ரில் பரி­சோ­தனை நிறை­வு­பெற்று பொது­மக்­க­ளுக்கு தடுப்பு மருந்தை வழங்­கும் சாத்­தி­யம் உள்­ள­தா­க­வும் தொற்­று­நோய் கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தின் உயிர்­பாது­ காப்பு நிபு­ணர் குயி­ஜென் யூ தெரி­வித்­துள்­ளார்.

அர­சாங்­கத் தொலைக்­காட்சி நடத்­திய நேர்­கா­ண­லில் திங்­கட்­கி­ழமை பங்­கேற்­றுப் பேசிய அந்­தப் பெண்­மணி, அண்­மைக் கால­மாக பரி­சோ­தனை மூலம் எந்­த­வொரு அசம்­பா­வி­த­மும் நிக­ழ­வில்லை என்­றார்.

ஏப்­ரல் மாதம் தமக்­குத் தாமே அந்த மருந்தை செலுத்­தி­ய­தா­க­வும் நான்கு தடுப்பு மருந்­தில் எந்த மருந்து தமது உட­லில் செலுத்­தப்­பட்­டது என நினை­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

அத்­தி­யா­வ­சி­யப் பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட மூன்­று­வித தடுப்பு மருந்­து­க­ளை­யும் சீன தேசிய மருந்து தயா­ரிப்பு குழு­ம­மும் (சினோ­ஃபார்ம்) அமெ­ரிக்க மருந்து தயா­ரிப்பு நிறு­வ­னப் பட்­டி­ய­லில் உள்ள சினோ­வாக் பயோ­டெக் நிறு­வ­ன­மும் இணைந்து தயா­ரித்து உள்­ளன. அர­சாங்­கத்­தின் அவ­ச­ர­நிலை பயன்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் இவை தயா­ரித்­துப் பரி­சோ­திக்­கப்­பட்­டன.

இதற்கு முன்­னர் ஜூலை மாதம் சினோ­ஃபார்ம் தெரி­விக்­கை­யில் மூன்­றாம் கட்­டப் பரி­சோ­தனை முடி­வுற்­ற­தும் ஆண்­டி­று­திக்­குள் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு வந்­து­வி­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

நான்­கா­வது தடுப்பு மருந்தை கேன்­சினோ பயோ­லா­ஜிக்ஸ் நிறு­வ­னம் தயா­ரித்­தது. சீன ராணு­வத்­தி­ன­ருக்கு அந்த மருந்தை வழங்க ஜூன் மாதம் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon