மலேசியாவில் ஆற்றுநீர் மாசு: குற்றத்தை மறுக்கும் சகோதரர்கள், பிணை மறுக்கும் நீதிமன்றம்

மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநி­லத்­தில் உள்ள ஆற்­றின் நீரை மாசு­ப­டுத்­தி­ய­தாக சுமத்­தப்­பட்டு உள்ள குற்­றச்­சாட்டை சகோ­த­ரர்­கள் நால்­வ­ரும் மறுத்துள்­ள­னர். அவர்கள் நால்வருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் ராவாங் மாவட்­டத்­தின் சுங்கை கோங் ஆற்று நீர் மாசு­பட்­ட­தால் தண்­ணீர் விநி­யோ­கம் தடைப்பட்­டது.

கோலா­லம்­பூ­ரி­லும் சிலாங்­கூ­ரி­லும் 1.2 மில்­லி­யன் மக்­கள் தண்ணீரின்றி அவதிப்பட்டனர்.

இச்­சம்­ப­வம் தொடர்­பாக வாகன பரா­ம­ரிப்பு நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஐவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

அவர்­களில் நால்­வர் அண்­ணன், தம்­பி­கள். கழி­வு­நீரை வெளி­யேற்­றியதன் விளை­வாக ஆற்று நீர் மாசு­பட்­ட­தா­க­ குற்­றச்­சாட்­டில் கூறப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon