‘நான்கு வாரத்தில் தடுப்பூசி’

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி நான்கு வாரத்தில் தயாராகிவிடும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பது, அவற்றின் மீதான பரிசோதனைகள் போன்றவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆனால், கொவிட்-19க்கான தடுப்பு மருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஆகலாம் என இந்தியாவின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பரிசோதனகள் முடிக்கப்படுவதற்கு முன்பாகவே, அதாவது கடந்த ஏப்ரல் முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்கி உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளது சீனா.  நான்கு வகை மருந்துகளைத் தயாரித்துள்ள சீனா அதனைப் பொதுமக்களுக்கு வழங்கி சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவர்களுக்கு ஏர்பட்ட பக்க விளைவுகள் குறித்த் அதகவல் ஏதுமில்லை.

உலகிலேயே, அமெரிக்காவில்தான் கிருமித் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை நேற்று 200,000 கடந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon