ஜோகூர் பாரு உணவகத்தில் உடும்பு, காட்டுப் பன்றி இறைச்சி விற்பனை

1 mins read
e83bb8e0-d09d-4fac-918b-b99d4eb87542
கடையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். படம்: பெர்னாமா -

ஜோகூர் பாருவின் ஜாலான் தஞ்சுங் மசாயில் உள்ள உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக உடும்பு, காட்டுப் பன்றி ஆகியவற்றின் இறைச்சி உணவுகள் விற்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவ்விரு விலங்குகளும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டவை.

அக்கடையில் ஏழு பொட்டலங்களில் உடும்புக் கறியும் இரண்டு நெகிழிக் கலன்களில் காட்டுப் பன்றி இறைச்சியும் மறைத்து வைக்கப் பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடையின் 57 வயது முதலாளி, செல்லுபடியாகாத பயண ஆவணங்களை வைத்து இருந்த இந்திய ஊழியர் உள்ளிட்ட சந்தேகப் பேர்வழிகள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்