சுடச் சுடச் செய்திகள்

கிருமித்தொற்றால் குறைப்பிரசவ அபாயம்: ஆய்வு

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனை சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு  மருத்துவ ரீதியாக சிக்கல் உருவாவதுடன் அவர்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வை நியூயார்க்கின் நோய்த் தடுப்பு, பரவல் மையம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு கருக்கலையும் அபாயமும், குழந்தை இறந்தேபிறக்கும் அபாயமும் அதிகரித்துக் காணப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. 

இந்த சங்கடமான ஆய்வு முடிவுகள், கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கடுைமயான நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறும் முந்தைய அறிக்கைகளை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், குறைந்த எண்ணிக்கையிலான பெண்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதன் முடிவுகள் பாதிக்கப்படக்கூடிய அனைத்து கர்ப்பிணிப் பெண்களின் நிலையை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது என சில நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர். 

மற்றொரு நிலவரத்தில், கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் தொடர்ந்து சோர்வாகக் காணப்பட்டனர் என்று அயர்லாந்து மருத்துமனை ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon