இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை: தென்னை மரம் ஏறி மக்களிடம் பேசிய அமைச்சர்

1 mins read
5d43b3ba-15b9-46af-b52b-e7e4cb7d948b
-

இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறி பேசியுள்ளார்.

அருந்திகா பெர்னாண்டோ எனும் மாநில அமைச்சர், நேற்று வராகபோலா என்ற இடத்திற்கு சென்றார்.

நாட்டில் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது என்ற செய்தியை மக்களிடம் தெரிவிப்பதற்காக தென்னை மரம் ஒன்றின் உச்சிக்கு ஏறினார். அங்கிருந்து மக்களிடம் அமைச்சர் பேசினார்.

"உள்ளூர் தொழிற்சாலைகளின் தேவை மற்றும் மக்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் 700 மில்லியன் தேங்காய் பற்றாக்குறை நிலவுகிறது. கிடைக்கும் வெற்று இடங்களை, தென்னை மரங்கள் நடுவதற்கு பயன்படுத்திக் கொள்வோம். நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த தென்னை துறைக்கு ஊக்கம் அளிப்போம். நாட்டில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை உயர்ந்துள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் தென்னை மரத்திலிருந்து பேசினார்.