அன்வார் மன்னிப்பு குறித்து விசாரணை

மலே­சி­யா­வின் எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கி­முக்கு வழங்­கப்­பட்ட அரச மன்­னிப்­புக்கு எதி­ராக முக­மது ஹைரூல் என்ற வழக்­க­றி­ஞர் கோலா­லம்­பூர் உயர் நீதி­மன்­றத்­தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதைத் தள்­ளு­படி செய்யவேண்­டும் என்று அன்­வார் இப்­ரா­கி­மும் மலே­சிய கூட்­ட­ர­சுப் பிர­தேச மன்­னிப்பு வழங்­கும் வாரி­ய­மும் செய்த மனுவை உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ளது.

ஒரு வழக்­க­றி­ஞர் என்ற முறை­யி­லும் பொது­மக்­களில் ஒரு­வர் என்ற முறை­யி­லும் திரு முக­மது ஹைரூ­லுக்கு இந்த மனு­வைத் தாக்­கல் செய்ய முழுத் தகுதி உள்­ள­தாக நீதி­பதி அக்­தர் தாஹிர் கூறி­னார். மேலும், மலே­சிய மன்­னர் மன்­னிப்பு வழங்­கும்­போது நிர்­வா­கப் பணி ஒன்றை மேற்­கொண்­டார் என்­றும் அதற்­கென சில சட்­டங்­களும் நடை­மு­றை­களும் உள்­ளன என்றும் கூறிய நீதி­பதி, நிர்­வாக அதி­கா­ரங்­களை ஒரு­வர் பயன்­படுத்­தும்­போது அது குறித்து கேள்வி எழுப்­ப­லாம் என்று அவர் தெரி­வித்­தார்.

“நிர்­வாக அதி­கா­ரத்­திற்கு உட்­பட்ட பிரச்­சி­னை­யாக இது இருப்­ப­தால் இதை நீதி­மன்­றத்­தில் ஏன் விசா­ரிக்­கக்­கூ­டாது என்று அவர் கேள்வி எழுப்­பி­னார். இந்த வழக்­கில் விசா­ர­ணைக்கு உட்­பட்ட பல அம்­சங்­கள் உள்­ள­தால் இந்த வழக்கு முழு விசா­ர­ணைக்கு உட்­படுத்­தப்­பட வேண்­டும். ஆகை­யால், இதை முழு விசா­ர­ணைக்கு முந்தைய இந்த நிலை­யில் இந்த மனு­வைத் தள்­ளு­படி செய்ய முடி­யாது என்று தமது தீர்ப்­பில் கூறி­னார். தொடர்ந்து பேசிய நீதி­பதி, பிர­தி­வா­தி­கள் இரு­வ­ரும் செய்த இந்த மனுக்­களை நான் தள்­ளு­படி செய்­கி­றேன் என்று கூறி­னார்.

பின்­னர், இந்த வழக்கு தொடர்­பான விசா­ர­ணைக்கு முந்­தைய கலந்­து­ரை­யா­டல் 2021 பிப்­ர­வரி 18ல் இடம்­பெ­றும் என்­றும் வழக்கு விசா­ரணை மார்ச் 24 - 26ஆம் தேதி வரை நடை­பெறும் எனக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!