யங்கூனில் கட்டுப்பாடு கடுமையாகிறது

மியன்­மா­ரின் பெரிய நக­ர­மான யங்­கூ­னி­லும் அதைச் சுற்­றி­உள்ள வட்­டா­ரங்­க­ளி­லும் கடந்த இரண்டு வாரங்­க­ளாக கொரோனா நோய்த்­தொற்று அதி­க­ரித்து வரு­கிறது.

அத­னை­ய­டுத்து அங்கு கட்­டுப்­பாடு கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது. பொதுத்­தேர்­தலை அந்­நாடு வரும் நவம்­பர் 8ஆம் தேதி எதிர்­நோக்­க­உள்­ளது இதற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது. இந்­தக் கட்­டுப்­பாட்­டைத் தொடர்ந்து மக்­கள் வீட்டை விட்டு வெளியே செல்­லக்­கூ­டாது. அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்காக குடும்­பத்­தில் ஒரு­வர் கடைத்­தெ­ரு­வுக்­குச் செல்­ல­லாம். அத்­தி­யா­வ­சி­யப் பணி­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்­கப்­படும். வங்கி, மருத்­து­வ­மனை, எரி­வாயு நிலை­யங்­கள், உண­வங்­கா­டி­கள் ஆகி­யவை வழக்­கம்­போல் செயல்­ப­ட­லாம். இது­கு­றித்து அந்­நாட்­டின் கொவிட்-19 கட்­டுப்­பாட்­டுக் குழு வழி­காட்­டிக் கையேடு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. தனி­யார் நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­களை சுழற்சி முறை­யில் வீட்­டில் இருந்து பணி­செய்­யச் சொல்­லு­மாறு அர­சாங்­கம் ஆணை பிறப்­பித்­துள்­ளது. அதையே அர­சாங்க ஊழி­யர்­களும் கடைப்­பி­டிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

புதிய நோய்த்­தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­து­வ­ரும் இச்­சூ­ழ­லில், தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு இரண்டு வாரம் தேவை­யில்லை. ஒரு வார காலம் போதும் என்று மியன்­மார் அறி­வித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் மட்­டும் அந்நாட்டில் புதி­தாக 671 பேர் நோய்த்­தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­னர். 54 மில்­லி­யன் பேரைக் கொண்­டுள்ள மியன்­மா­ரில் முதன்­மு­த­லாக மார்ச் மாத இறு­தி­யில் கொவிட்-19 நோய்த்­தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டது. அங்கு இது­வரை மொத்­தம் 5,805 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். 94 பேர் கொவிட்-19க்குப் பலி­யாகி விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!