கொவிட்-19: இந்தோனீசிய மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நோயாளிகள்

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பிரதான மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், ஜகார்த்தாவில் உள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற 20 நோயாளிகள் வரை காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனைகளில் சுமையைக் குறைக்க ஒரு சில ஹோட்டல்களைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலேசான அறிகுறிகள் உடைய கொவிட்-19 நோயாளிகள் அங்கு தங்கவைக்கப்படுவர்.

தலைநகரில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்களைத் தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. ஜகார்த்தாவில் 190 மருத்துவமனைகள் இருப்பதாக அந்நகர ஆளுநர் அனிஸ் பஸ்வீடன் தெரிவித்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் ஜகார்த்தாவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 67 மருத்துவமனைகளில் 77 விழுக்காடு படுக்கைகள் நிரப்பப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 69 விழுக்காடு படுக்கைகள் நிரப்பப்பட்டிருந்தன.

இப்போதைய நிலவரத்தைக் கேட்டறிய அங்குள்ள ஆறு மருத்துவமனைகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு மூன்று நாட்களுக்கு முன்பு தொடர்புகொண்டது. உள்நோயாளி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை பசார் மிங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற 20 கொவிட்-19 நோயாளிகள் காத்திருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. மருத்துவமனையின் 220 படுக்கைகள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டதாகவும் கூடுதலாக 80 படுக்கைகள் தயார் செய்யப்படுவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.

தனியார் மருத்துவமனைகளைவிட பொது மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்டநாள் தங்கி சிகிச்சை பெறுவதாக அறியப்படுகிறது. நோய்த்தொற்றில் இருந்து நோயாளிகள் குணமடைந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் அவர்களைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் தங்கவைக்க பொது மருத்துவமனை நிர்வாகம் அனுமதிப்பதாகத் தெரிகிறது.

இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் சிசிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுவது குறித்து விமர்சகர்கள் குறைகூறுகின்றனர்.

எனினும், கொவிட்-19 நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தனக்கு ஆற்றல் இருப்பதாக அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தோனீசியாவில் மேலும் 4,071 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!