ராணுவத்தின் உதவியை நாடும் ஸ்பெயின் தலைநகர்

ராணுவத்தின் உதவியை நாடும் ஸ்பெயின் தலைநகர்

1 mins read

மட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அந்நகரும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களும் பகுதியாக முடக்கப்பட்டுள்ளன.

பகுதியாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ள வேளையில் முடக்கநிலையை அமல்படுத்தும் போலிசாரின் முயற்சிக்கு வலுசேர்க்க ராணுவத்தின் உதவியை மட்ரிட் நாடுகிறது.