ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேருக்குத் தொற்று

ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பேருக்குத் தொற்று

1 mins read
a156257d-d651-4677-80c1-33be8a7735e9
படம்: ராய்ட்டர்ஸ் -

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா கிருமி வேகமாகப் பரவுகிறது. இம்மாதம் 20ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 1,998,897 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே வாரத்தில் இத்தனை சம்பவங்கள் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை என்று அது கூறியது.

என்றாலும், முந்தைய வாரத்துடன் ஒப்புநோக்க கடந்த வாரம் மரணங்களின் எண்ணிக்கை 10% குறைந்தது. கடந்த வாரம் உலகம் முழுவதும் 37,700 மரணங்கள் பதிவாகின.