மலேசிய அரசியலில் திடீர் குழப்பம்

மலேசிய அரசியலில் திடீர் குழப்பம்

1 mins read
de5c4630-22fd-4e55-9289-fbcfa44dcd53
படம்: AFP, MUHYIDDIN YASSIN/FACEBOOK -

கெஅடிலான் கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம், ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அதிரடியாக அறிவித்து மலேசிய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளார்.

இவரது அறிவிப்பு மலேசிய அரசியலில் குழப்பத்தையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மேலும் தற்போதைய பிரதமர் முகைதீன் யாசினுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனது அரசாங்கம் வலுவாக இருப்பதாகவும் தொடர்ந்து தாமே பிரதமராக நீடிப்பேன் என்றும் திரு முகைதீன் கூறியுள்ளார்.

இதற்கிடையே அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தீர்க்க மாமன்னருக்கு மூன்று வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் கவனிப் பாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடத்துவது முதல் வாய்ப்பு. இது பற்றி முன்பே ஒரு முறை ஆலோசனை நடத்தப் பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது 2வது வாய்ப்பு.

அன்வார் இப்ராஹிமை பிரதமராக்குவது 3வது வாய்ப்பு. இதில் மாமன்னர் எதைத் தேர்ந்தெடுப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர் சகர்கள் கூறுகின்றனர்.