'ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்'

'ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்'

1 mins read
4d665e46-b2d4-440e-91aa-2128dba2aa0a
படம்: இபிஏ -

ஐக்கிய அரபு சிற்றரசுகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் இன்று முதல் தொடங்குகின்றன.

இதனை தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பான உத்தரவை அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நயான், "வேலைவாய்ப்புச் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊதியம் வழங்குவதில் பாலின சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்கான முயற்சிகளை இவ்வாண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அந்த நாட்டின் மனிதவளத்துறை தொடங்கியது.

இந்தப் புதிய சட்டத்திருத்தங்கள் பாலின சமத்துவத்திற்கான அடுத்தகட்ட நடைமுறையாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்