2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்

2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்

1 mins read
2efd0063-7f0d-430d-abf8-fdf617a34a87
படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

பிரிட்டனைச் சேர்ந்த ஓ சச்சா ஜஃப்ரி 'தி ஜேர்னி ஆஃப் ஹியூமானிட்டி' எனும் தலைப்பிலான மாபெரும் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கிறார்.

கடந்த 23ஆம் தேதி துபாயில் உள்ள எமிராட்டி எனும் ஹோட்டலில் அந்த ஓவியம் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் சில மாதங்கள் அவர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இரண்டு காற்பந்துத் திடல் அளவிலான அந்த ஓவியம் 'ஹியூமானிட்டி இன்ஸ்பையர்டு' எனும் திட்டப்பணியின் ஓர் அங்கமாகும்.

அந்தத் திட்டப்பணியின் மூலம் 30 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார் திரு ஜஃப்ரி.

வறுமையில் வாடும் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக அந்த நிதியைப் பயன்படுத்த இருக்கிறார் திரு ஜஃப்ரி.

குறிப்புச் சொற்கள்