அமெரிக்காவில் ஏழு மில்லியன் பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி மொத்தம் ஏழு மில்லியன் பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இது, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் 20 விழுக்காடாகும்.

அமெரிக்கா முழுவதும் கிருமி பரவியிருந்தாலும் மத்திய மேற்கு வட்டார மாநிலங்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையும் 200,000ஐத் தாண்டியுள்ள வேளையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில்தான் கிருமித்தொற்றுக்கு அதிகமானோர் உயிரிழந்தனர்.

மேலும் ஒவ்வொரு நாளும் கிருமித்தொற்றுக்கு 700 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

இதில் கலிபோர்னியா மாநிலம் முன்னிலை வகிக்கிறது.

அந்த மாநிலத்தில் மட்டும் 800,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

இதற்கு அடுத்ததாக டெக்சஸ், புளோரிடா, நியூயார்க் ஆகிய இடங்களில் கிருமி அதிவேகத்தில் பரவி வருகிறது.

கடந்த நான்கு வாரங்களில் ஓஹையோவைத் தவிர மற்ற மத்திய மேற்கு வட்டார மாநிலங்களில் அதிக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

சவுத் டெகோடாவில் தொற்று 166 விழுக்காடு அதிகரித்து 8,129 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நார்த் டெகோடாவில் புதிய சம்பவங்கள் இரண்டு மடங்குக்கு அதிரித்து 8,752ஐ எட்டியுள்ளது.

அமெரிக்காவின் 50 மாநிலங்க களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது.

கொவிட்-19: மரண எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி கிட்டத்தட்ட ஒரு மில்லியனை ெநருங்கியுள்ளது.

இதையடுத்து வரலாற்றில் ஆக மோசமான கொள்ளை நோயாக கொவிட்-19 உருவெடுத்துள்ளது. 2009ல் எச்1என்1 கிருமி பரவியபோது 18,500 பேர் மாண்டனர்.

ஆனால் பின்னர் ‘த லான்சட்’ எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் 151,770 முதல் 575,400 பேர் வரை எச்1என்1 நோய்க்கு இறந்திருக்கலாம் எனத் திருத்தப்பட்டது. இதற்கு அடுத்ததாக சார்ஸ் நோய் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நோய்க்கு 983 பேர் பலியாகினர். ஆனால் கொவிட்-19 இவற்றையெல்லாம் மிஞ்சியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!