சுடச் சுடச் செய்திகள்

டிரம்புக்கு தலைவர்கள் கண்டனம்

வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி ேவட்பாளருமான டோனல்ட் டிரம்ப்பும் அவருக்கு எதிராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

ஆனால் தேர்தலில் தோற்றாலும் பொறுப்பை முறைப்படி ஒப்படைக்க மாட்டேன் என்று ஐநா பொதுக்கூட்டத்தில் அதிபர் டோனல்ட் டிரம்ப் பேசியிருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கருத்துக் கணிப்புகளில் திரு ஜோ பைடன் முன்னிலை வகிக் கிறார். இவ்வேளையில் பொறுப்பை ஒப்படைக்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மெக்கனல், நவம்பர் 3ஆம் தேதி வெற்றி பெறும் நபர் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். 1792ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது போல பதவி மாற்றம் சுமூகமாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசி, நீங்கள் வடகொரியாவில் இல்லை. நீங்கள் துருக்கியில் இல்லை, நீங்கள் ரஷ்யாவில் இல்லை என்பதை அதி பருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றார். செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், நமது நாட்டின் சட்டத்தையும் விதி முறைகளையும் குறைவாக மதிக்கிற அதிபரை நாம் வைத்துள்ளோம் என்று சாடினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon