பாரிஸ் நகரில் கத்திக்குத்து; நால்வர் காயம்

பாரிஸ் நகரில் கத்திக்குத்து; நால்வர் காயம்

1 mins read
f63d5d97-4b49-4820-981c-8548e57aceaf
முன்பு 'சார்லி ஹெப்டோ' சஞ்சிகை செயல்பட்ட அலுவலகத்துக்கு அருகே இந்தக் கத்திக்குத்து சம்பவம் நடந்தது என்று பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி -

பாரிஸ்: பாரிஸ் நகரில் நால்வர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு 'சார்லி ஹெப்டோ' சஞ்சிகை செயல்பட்ட அலுவலகத்துக்கு அருகே இந்தக் கத்திக்குத்து சம்பவம் நடந்தது என்று பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதே இடத்தில்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

சம்பவம் தொடர்பில் சந்கேக நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த நால்வரில் இருவரது நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

"நான் அலுவலகத்தில் இருந்தேன், அப்போது அலறல் சத்தம் கேட்டது, சன்னல் வழியாகப் பார்த்தபோது ஒரு பெண் தரையில் விழுந்து கிடந்தார், உடனே உதவிக்கு ஓடினேன்," என்று வாெனாலிக்கு அளித்த ேபட்டியில் சாட்சியாளர் ஒருவர் கூறினார்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு கத்தியை போலிசார் கைப்பற்றியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிைடயே இந்த இடத்தை தவிர்க்குமாறு உள்ளூர் மக்களை போலிசார் அறிவுறுத்தி யுள்ளனர். அங்கு ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சந்தேக நபர் ஏன் கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை.

அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலிசார் தெரிவித்தனர்.